சொத்து சந்தை சரிவால் சீன மக்கள் பாதிப்பு

சொத்து சந்தை சரிவால் சீன மக்கள் பாதிப்பு

1 mins read
a873983f-d884-4ef0-af6d-9f6dd58c78d2
மக்கள் நம்பிக்கை இழந்துள்ளதால் கட்டிய வீடுகள் விற்பனையாவதிலும் இப்போது சிக்கல்கள் எழுந்துள்ளன. - படம்: ஏஎஃப்பி

பெய்ஜிங்: சீனாவில் சொத்து சந்தை சரிவால் அந்நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம், நுகர்வோர் எண்ணிக்கை ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளது.

பல மக்கள் தங்களது முழு சேமிப்புகளை வைத்தும் கடன் வாங்கியும் வீடுகளை வாங்க சொத்து நிறுவனங்களிடம் பணம் கொடுத்துள்ளனர்.

கொவிட்-19 பிரச்சினை, புதிய விதிமுறைகள், கூடுதல் செலவுகள் போன்றவற்றால் நிறுவனங்களிடம் போதிய பணம் இல்லை, இதனால் பல கட்டுமானப் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

2021ஆம் ஆண்டு கட்டிமுடிக்க வேண்டிய வீடுகள் இன்னும் கட்டி முடிக்ப்படாததால் பல வாடிக்கையாளர்கள் செய்வது அறியாது நிற்கின்றனர்.

சென் என்னும் 53 வயது விவசாயி தன் மகனுக்கு வீடு வாங்க தனது சேமிப்பு, நண்பர்களிடமும் உறவினர்களிடமும் கடன் வாங்கி வீட்டிற்கான பணத்தை தயார் செய்து கொடுத்தார். ஆனால் வீடு இன்னும் கிடைக்காததால் தாம் தினமும் கலங்குவதாகவும், மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 30 ஆண்டுகளாக சீனாவின் சொத்து சந்தை மாபெரும் வளர்ச்சி கண்டது. நியூயார்க், லண்டன் என உலகின் பல முன்னணி நகர்களுக்கு இணையாக சொத்து சந்தையில் சீன நகர்கள் வளர்ந்தன.

வீடுகளை கட்டும் நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும் கடன்களை சீன அரசாங்கம் 2020 ஆண்டு கட்டுப்படுத்தியது. அதனால் நிறுவனங்கள் போதிய பணம் இல்லாமல் பாதிக்கப்பட்டன.

பல நிறுவனங்கள் நொடித்துப் போயின. இதனால் பணத்தை கொடுத்தும் வீடுகள் இல்லாமல் சீன மக்கள் தவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

மக்கள் நம்பிக்கை இழந்துள்ளதால் கட்டிய வீடுகள் விற்பனையாவதிலும் இப்போது சிக்கல்கள் எழுந்துள்ளனு.

குறிப்புச் சொற்கள்