உக்ரேனில் ஆளில்லா வானூர்தி மூலம் ரஷ்யா தாக்குதல்

உக்ரேனில் ஆளில்லா வானூர்தி மூலம் ரஷ்யா தாக்குதல்

1 mins read
82014348-ae1e-4a59-85e9-0b5cc77260e9
கிழக்கு உக்ரேனின் கார்கிவ் பகுதியில் கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 6) ரஷ்யா நடத்திய ஏறிகணைத் தாக்குதலில் சேதமடைந்த கட்டடப்பகுதியில் மீட்புப் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். அந்தத் தாக்குதலில் ஒரு குழந்தை கொல்லப்பட்டது. இருபதுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்தனர். - படம்: இபிஏ

உக்ரேன் மீது ரஷ்யா ஒரே இரவில் 36 ஆளில்லா வானூர்தி தாக்குதல்களை நடத்தியுள்ளது. அதில் 27ஐ உக்ரேனின் ஆகாயப் படையின் சாதனங்கள் அழித்ததாக உக்ரேனின் விமானப்படை செவ்வாயன்று தெரிவித்தது.

ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷாஹெட் ஆளில்லா வானூர்தி மூலம் நடத்தப்பட்ட தாக்குதல்கள் உக்ரேனின் ஒடேசா, மைகோலைவ், கெர்சன் பகுதிகளை குறிவைத்து நடத்தப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

கடந்த நாட்களில் ரஷ்யா, மோட்டார், பீரங்கி, ஆளில்லா வானூர்திகள் வழியாக 79 குண்டு வீச்சுத் தாக்குதல்களை நடத்தியதாகவும் நான்கு பேர் காயமடைந்ததுடன் பல கட்டடங்கள் சேதமடைந்ததாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்