காஸா எல்லையில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆகாயத் தாக்குதலும் ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள பாலஸ்தீன வட்டாரத்தை அது முற்றுகையிட்டிருப்பதும் இனப்படுகொலைக்கு ஈடான நடவடிக்கைகள் என்று ஐக்கியநாட்டு நிறுவனத்துக்கான (ஐநா) பாலஸ்தீனத் தூதர் சாடியுள்ளார்.
ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் சென்ற சனிக்கிழமை நடத்திய தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி தந்தது.
அதையடுத்து, காஸாவிற்கான உணவு, எரிபொருள் விநியோகத்திற்கு முழுமையான தடையை இஸ்ரேலியத் தற்காப்பு அமைச்சர் அறிவித்தார்.
ஆனால் பசியால் தவிக்க விடுவதை ஒரு போர் உத்தியாகக் கையாள்வது, விமானம் மூலம் வெடிகுண்டு வீசுவது போன்ற இஸ்ரேலின் நடவடிக்கைகள் இனப்படுகொலைக்கு ஈடானவை என்று ஐநாவுக்கான பாலஸ்தீனத் தூதர் ரியாத் மன்சூர் கூறியுள்ளார்.
ஐ நா பாதுகாப்பு மன்றத்துக்கு எழுதிய கடிதத்தில் அவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

