ஆகப் பெரிய இதய வடிவை உருவாக்க 2,000 கி.மீ. சைக்கிள் ஓட்டிய அப்பா-மகள்

ஆகப் பெரிய இதய வடிவை உருவாக்க 2,000 கி.மீ. சைக்கிள் ஓட்டிய அப்பா-மகள்

1 mins read
1fb9cf37-b528-4bee-950c-8f5fd624051b
அப்பாவும் மகளும் சைக்கிள் ஓட்டிய பாதை ஜிபிஎஸ் வரை படத்தில் இதய வடிவத்தை உருவாக்கியது. - படம்: STRAVA/ ஃபேஸ்புக்

தந்தை-மகள் ஜோடி சைக்கிள் ஓட்டி ‘ஜிபிஎஸ்’ வரைபடத்தில் மிகப் பெரிய இதய வடிவத்தை (குளோபல் பொசிஷனிங் சிஸ்டம்) உருவாக்கி புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.

கின்னஸ் உலக சாதனை இணையத்தளத்தின் படி, திரு ஃபிரடெரிக் டி லானோவெல்லே, அவரது பதின்ம வயது மகள் மதில்டே இருவரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை பிரான்சில் 2,162 கிலோ மீட்டர் தூரம், 117 மணிநேரம் சைக்கிள் ஓட்டினர். அவர்கள் பயணம் செய்த பாதை வரைபடத்தில் இதய வடிவத்தை உருவாக்கியது. இச்சாதனை மூலம் இதயத்தில் குறைபாடு உள்ள குழந்தைகளின் நிதிக்காக €26,000 (S$37,000) நிதியும் திரட்டினர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்