அதிரடி நடவடிக்கை மூலம் 250 பிணைக்கைதிகளை மீட்ட இஸ்ரேல்

அதிரடி நடவடிக்கை மூலம் 250 பிணைக்கைதிகளை மீட்ட இஸ்ரேல்

1 mins read
f7892c52-b846-4a15-ac3f-b7bc44268fc1
இஸ்ரேல் கடற்படையின் சிறப்புப் பிரிவு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் ஹமாஸ் போராளிகள் 60 பேர் கொல்லப்பட்டனர். - காணொளிப்படம்

டெல் அவிவ்: ஹமாஸ் போராளிகள் பிடித்து வைத்திருந்த 250 பேரை இஸ்ரேல் தற்காப்புப் படையினர் பாதுகாப்பாக மீட்டனர்.

இம்மாதம் 7ஆம் தேதி இடம்பெற்ற இந்த அதிரடி நடவடிக்கை தொடர்பான காணொளியை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.

காஸா பாதுகாப்பு வேலியை ஒட்டிய பகுதியில் இஸ்ரேலின் முதல்நிலை ‘ஷயடெட் (ஃபுளோட்டிலா) 13’ படைப்பிரிவினர் மேற்கொண்ட இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இந்த அதிரடி நடவடிக்கையின்போது ஹமாஸ் போராளிகள் 60 பேரை இஸ்ரேலியப் படையினர் கொன்றனர்; மேலும் 26 பேரைச் சிறைபிடித்தனர்.

படைவீரர் ஒருவரின் தலைக்கவசத்தில் பொருத்தப்பட்ட படக்கருவியின் இந்நடவடிக்கை காணொளியாகப் பதிவுசெய்யப்பட்டது.

‘ஷயடெட் (ஃபுளோட்டிலா) 13’ படைப்பிரிவு, இஸ்ரேலியக் கடற்படையைச் சேர்ந்தது.

முன்னதாக, 2019-2021ல் பாரசீக வளைகுடாப் பதற்றநிலையின்போது, ஈரானிய சரக்குக் கப்பல்கள்மீது மேற்கொண்ட தாக்குதல்களை அடுத்து, அப்படைப்பிரிவு அனைத்துலகக் கவனத்தை ஈர்த்தது.

குறிப்புச் சொற்கள்