லில்லி: வடகிழக்கு பிரான்ஸ், அராஸ் நகரில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த கத்திக்குத்துத் தாக்குதலில் ஆசிரியர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர் என்று பிரான்ஸ் காவல்துறையும் வட்டார அதிகாரிகளும் தெரிவித்தனர்.
தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பெயர் குறிப்பிடப்படவில்லை. எனினும், அவர் ரஷ்யாவின் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் செச்சினியாவின் தெற்கு காகசஸ் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருக்கக்கூடியவர்கள் தேசிய பட்டியலில் அவர் பெயர் ஏற்கெனவே இடம்பெற்றிருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்களில் பலமுறை குத்தப்பட்ட பாதுகாப்பு அதிகாரியும், அதிகம் ஆபத்தில்லாத நிலையில் இருக்கும் ஆசிரியர் ஒருவரும் அடங்குவர்.
பள்ளியில் எந்த மாணவரும் பாதிக்கப்படவில்லை எனக் காவல்துறை கூறியது.

