பிரான்ஸ்: கூடுதல் பாதுகாப்புப் பணியில் 7,000 படை வீரர்கள்

பிரான்ஸ்: கூடுதல் பாதுகாப்புப் பணியில் 7,000 படை வீரர்கள்

1 mins read
ea8ec84d-314a-48f0-bdb2-048eb6ef1576
பிரான்சின் கல்வி, இளையர் அமைச்சர் கேப்ரியல் அட்டல் (வலமிருந்து இரண்டாவது) கத்திக்குத்து சம்பவம் நடந்த அராஸில் உள்ள காம்பேட்டா உயர்நிலைப் பள்ளிக்கு சனிக்கிழமை வருகையளித்தார். தாக்குதலில் ஆசிரியர் ஒருவர் கொல்லப்பட்டார், இருவர் பலத்த காயமடைந்தனர். - படம்: ஏஎஃப்பி

பாரிஸ்: இஸ்லாமியர்களின் தாக்குதலில் ஒரு ஆசிரியர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அதிகரிக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் பணிக்கு 7,000 வீரர்களை பிரெஞ்சு அதிபர் மக்ரோன் பணித்துள்ளார்.

வடக்கு பிரான்சின் அராஸ் நகரினுள்ள பள்ளி ஒன்றில் 20 வயது இளைஞன் ஆசிரியர் ஒருவரைக் கத்தியால் குத்தியதில் மேலும் இருவர் படுகாயமடைந்ததை அடுத்து, வெள்ளிக்கிழமை பிரான்சில் உயர்நிலைப் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய நகர மையங்கள், சுற்றுலாத் தலங்களில் தொடர்ந்து இடம்பெற்று வரும் கண்காணிப்புப் பணிகளில் திங்கட்கிழமை மாலைக்குள் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்படுவர்.

பல ஆண்டுகளாக தொடர்ச்சியான இஸ்லாமிய தாக்குதல்களை பிரான்ஸ் எதிர்கொண்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்