தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமைதிப் பேச்சை வலியுறுத்த மத்திய கிழக்குப் பயணம் மேற்கொள்ளும் சீனத் தூதர்

1 mins read
9df91c10-eb24-4d19-b05c-efdc17bd6239
இஸ்ரேலின் தரைவழித் தாக்குதலுக்கு அஞ்சி மூட்டை முடிச்சுகளுடன் காஸாவை விட்டு வெளியேறும் பாலஸ்தீனர்கள். - படம்: ஏஎஃப்பி

பெய்ஜிங்: சீனாவின் சிறப்புத் தூதர் ஜாய் ஜுன், அடுத்த வாரம் மத்திய கிழக்கு வட்டாரத்திற்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் மோதல் நிலவும் வேளையில், சண்டை நிறுத்தம், அமைதிப் பேச்சு ஆகியவற்றை வலியுறுத்துவது அவரது பயணத்தின் நோக்கம்.

சீன அரசாங்கத் தொலைக்காட்சியான சிசிடிவி, ஞாயிற்றுக்கிழமை (அக். 15) அதனைத் தெரிவித்தது.

சண்டை நிறுத்தத்திற்காக பல்வேறு தரப்பினருடன் ஒத்துழைக்கவும் பொதுமக்களைப் பாதுகாக்கவும் காஸாவில் நிலைமையைச் சீராக்கவும் அமைதிப் பேச்சுகளை ஊக்குவிக்கவும் திரு ஜாய் முயற்சி மேற்கொள்வார் என்று சிசிடிவி அதன் அதிகாரபூர்வ சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளது.

காஸாவில் ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகத் தரைவழித் தாக்குதலை மேற்கொள்ள இஸ்ரேல் தயாராகிவரும் நிலையில் சிசிடிவியின் தகவல் வெளிவந்துள்ளது.

தாக்குதலுக்கு முன்பாக, காஸாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு மில்லியனுக்கு மேற்பட்டோரை அங்கிருந்து வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. இந்த வெளியேற்றம் மனிதநேயப் பேரிடரை ஏற்படுத்தக்கூடும் என்கின்றன நிவாரண உதவிக் குழுக்கள்.

குறிப்புச் சொற்கள்
இஸ்‌ரேல்சீனாஅமைதி