காஸா: காஸா எல்லையில் அக்டோபர் 7ஆம் தேதி முதல் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் ஆகாயத் தாக்குதல்களில் ஏறக்குறைய 2,750 பாலஸ்தீனர்கள் மாண்டதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் 9,700 பேர் மாண்டதாக அது குறிப்பிட்டது.
திங்கட்கிழமை (அக். 16) பாலஸ்தீன அமைச்சு இத்தகவலை வெளியிட்டது.
அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல்மீது நடத்திய திடீர் தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேலிய ராணுவம் காஸாவில் தாக்குதல் மேற்கொள்கிறது.
காஸாவின் வடபகுதியிலிருந்து ஒரு மில்லியனுக்கு மேற்பட்டோரை வெளியேறுமாறு உத்தரவிட்ட இஸ்ரேல், அங்கு தரைவழித் தாக்குதலுக்கும் தயாராகிவருகிறது.

