தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இஸ்‌ரேல் மோதல் தொடர்பில் எகிப்து, அரபு நாடுகளுக்கு சீனா கூடுதல் ஒத்துழைப்பு வழங்கத் தயார்

1 mins read
67294996-540f-4a40-be71-c4dc531ad9ef
இஸ்‌ரேல்-ஹமாஸ் போர் தொடர்பில் எகிப்துக்கும் அரபு நாடுகளுக்கும் கூடுதல் ஒத்துழைப்பு வழங்க சீனா தயாராக இருப்பதாக சீன அதிபர் ஸி ஜின்பிங் தெரிவித்துள்ளார். - படம்: இபிஏ

பெய்ஜிங்: இஸ்‌ரேல்-பாலஸ்தீன போர் தொடர்பில் ஆரம்பகட்டத்திலேயே ஒரு முழுமையான, நீடித்த தீர்வு காண்பதற்கு எகிப்து, அரபு நாடுகளுக்குத் தான் கூடுதல் ஒத்துழைப்பு நல்கத் தயார் என்று சீன அதிபர் ஸி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவிவரும் மோதலைத் தணிப்பதற்கு எகிப்து பங்காற்றி வருவதைத் தான் பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

போர் நிறுத்தமே உடனடித் தீர்வு என்பதையும் வியாழக்கிழமை எகிப்திய பிரதமர் முஸ்தபா மேட்பௌலியைச் சந்தித்துப் பேசிய அதிபர் ஸி கூறினார்.

உள்கட்டமைப்பு, வேளாண் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற அம்சங்களில் எகிப்துடனான ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா விரும்புவதாக அவர் குறிப்பிட்டார். அதேவேளை எகிப்திலிருந்து தருவிக்கும் உயர்தர உற்பத்தியையும் விரிவுபடுத்த விருப்பம் உள்ளதாக அதிபர் ஸி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
சீனாஇஸ்‌ரேல்வேளாண்