தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆட்குறைப்பு செய்யும் நோக்கியா: 14,000 ஊழியர்கள் பாதிப்பு

1 mins read
3910cee2-de7d-4434-b959-432ae61ecadf
நோக்கியா எக்ஸ்ஆர்21 திறன்பேசியைத் தயாரிக்கும் ஊழியர். - படம்: ராய்ட்டர்ஸ்

ஸ்டாக்ஹோம்: அடுத்த தலைமுறையுடைய 5ஜி பொருள்களின் விற்பனை மேலோங்கிவிட்ட நிலையில், நோக்கியா நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு விற்பனைகள் கிட்டத்தட்ட 20% குறைந்துவிட்டது.

இதனால், செலவுகளைக் குறைக்கும் முயற்சியில் நிறுவனம் ஆட்குறைப்பு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனால் கிட்டத்தட்ட 14,000 ஊழியர்கள் பாதிக்கப்படுவர் என்று கூறப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், 5ஜி தொழில்நுட்பச் சாதனங்களுக்காக நோக்கியா, எரிக்சன் ஆகிய நிறுவனங்களை நாடுவது குறைந்துவருகிறது.

இந்நிலையில், 2026ஆம் ஆண்டுக்குள் 800 மில்லியன் யூரோவுக்கும் (S$1.16 பி.) 1.2 பில்லியன் யூரோவுக்கும் (S$1.74 பி.) இடைப்பட்ட சேமிப்பை நோக்கியா அதன் இலக்காகக் கொண்டுள்ளது.

ஆட்குறைப்பை அடுத்து நோக்கியாவின் ஊழியர் எண்ணிக்கை ஏறத்தாழ 77,000க்குக் குறையும் என்று நிறுவனம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டது.

எரிக்சன் நிறுவனம் இவ்வாண்டு ஆயிரக்கணக்கான ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துள்ள நிலையில், அதன் விற்பனை தொடர்ந்து 2024ஆம் ஆண்டிலும் பாதிக்கப்படலாம் என்று செவ்வாய்க்கிழமையன்று தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்