டமாஸ்கஸ்: சிரியாவின் டமாஸ்கஸ், அலெப்போ ஆகிய விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தி அவற்றைச் செயல்படாமல் செய்துவிட்டதாக சிரியாவின் அரசுத் தரப்பு ஊடகம் தெரிவித்தது.
அந்த விமான நிலையங்களுக்குச் செல்லும், அங்கிருந்து புறப்படும் விமானச் சேவைகள் லடாகியா என்ற அனைத்துலக விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்படுவதாக சிரியாவின் போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டது.

