மிச்சிகன்: அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலம், டெட்ராய்ட் நகரில் சனிக்கிழமை யூதர் வழிபாட்டுத்தலத் தலைவர் ஒருவர் அவரது வீட்டிற்கு வெளியே குத்திக்கொல்லப்பட்டது கண்டறியப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஜனநாயகக் கட்சி அரசியல் தலைவர்களின் ஆலோசகரான திருவாட்டி சமந்தா வோல், 40, என்பவரின் மரணம் ஃபேஸ்புக்கில் உறுதிசெய்யப்பட்டது.
சனிக்கிழமை மாலை நிலவரப்படி, கொலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு டெட்ராய்ட் காவல்துறைத் தலைவர் ஜேம்ஸ் இ.வைட் மின்னஞ்சல் மூலம் அனுப்பிய அறிக்கையில், “இந்தக் கொலை பல கேள்விகளை எழுப்பியுள்ளது,” என்றார்.
என்ன நடந்தது என்பதை அதிகாரிகள் கண்டறியும்வரை பொறுமையுடன் இருக்குமாறு பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டார்.
திருவாட்டி வோலின் மரணம் யூதர் சமூகத்தையும் ஜனநாயகக் கட்சியினர் தரப்பையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

