மூன்றாவது பொருளியல் நாடாக உருவெடுக்கிறது ஜெர்மனி

மூன்றாவது பொருளியல் நாடாக உருவெடுக்கிறது ஜெர்மனி

1 mins read
4c75fd15-4241-47b7-8236-69aeb0d9a31c
ஜெர்மனியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இவ்வாண்டு US$4.43 டிரில்லியனாக (S$6.04 டிரில்லியன்) இருக்கும் என்று அனைத்துலக பண நிதியம் கணித்துள்ளது.  - படம்: புளூம்பெர்க்

ஃபிராங்க்ஃபர்ட்: உலகின் மூன்றாவது பெரிய பொருளியல் நாடு என்னும் இவ்வாண்டுக்கான அந்தஸ்தை ஜப்பானிடமிருந்து ஜெர்மனி பெறவிருக்கிறது.

அமெரிக்க டாலர் மற்றும் யூரோ நாணயத்துக்கு நிகரான ஜப்பானிய யென் மதிப்பு சரிந்ததைத் தொடர்ந்து அந்தஸ்து இடம் மாறுகிறது.

அனைத்துலக பண நிதியம் அதனை கோடி காட்டியுள்ளது. ஜெர்மனியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இவ்வாண்டு US$4.43 டிரில்லியனாக (S$6.04 டிரில்லியன்) இருக்கும் என்று நிதியம் கணித்துள்ளது.

அதேவேளை ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி US$4.23 டிரில்லியன் என்ற அளவிலேயே இருக்கும் என்று அது முன்னுரைத்து உள்ளது.

இதற்கு முன்னர் 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் யூரோவின் மதிப்பு 160 யென்னாக வீழ்ச்சி அடைந்திருந்தது. தற்போது கிட்டத்தட்ட அதே வீழ்ச்சியின் அருகில் யென் வர்த்தகமாகி வருகிறது.

ஜப்பானின் நாணயக் கொள்கையில் ஏற்பட்ட அடிப்படை மாறுபாடுகள் காரணமாக யென் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது.

பணவீக்க உயர்வைச் சமாளிக்க, ஐரோப்பிய மத்திய வங்கியும் அமெரிக்க மத்திய வங்கியும் வட்டி விகிதங்களை கொள்ளைநோய் காலத்து அடிமட்டத்திலிருந்து உயர்த்தி உள்ளன.  

குறிப்புச் சொற்கள்