சீசுவான்: சீனாவின் சீசுவான் மாநிலத்தில் பெண்மணி ஒருவர் தமது மகனுக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார்.
தமது மகன் வெளிநாட்டுக்குச் சென்று கல்வி பயில தேவையான பணத்தை அவர் வங்கிக் கணக்கில் போட்டு வைத்திருந்தார். அந்த வங்கிக் கணக்கு அவரது மகனின் பெயரில் இருந்தது.
இந்நிலையில், தற்போது அந்த வங்கிக் கணக்கில் எஞ்சியுள்ள 300,000 யுவானை (S$57,3000) மீட்க ஒற்றைப் பெற்றோரான அந்த 41 வயது பெண்மணி வழக்கு தொடுத்துள்ளார்.
அந்தப் பெண்மணியின் மகன் வங்கிக் கணக்கில் இருந்த 200,000 யுவானை வெளியே எடுத்து தமது காதலிக்காக அதைச் செலவு செய்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மறுமணம் செய்த பிறகு, எதிர்காலத்தில் சொத்து தகராறு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் தமது மகனின் பெயரில் வங்கிக் கணக்கைத் திறந்து தமது வாழ்நாள் சேமிப்பை அதில் போட்டிருந்தார் அந்தப் பெண்மணி.
ஆனால் அவரது 19 வயது மகனும் அவனது காதலியும் அதிலிருந்து 200,000 யுவானை வெளியே எடுத்து பயணச் செலவுகளுக்காகப் பயன்படுத்தினர். அந்தப் பெண்மணியின் சேமிப்புப் பணத்தைப் பயன்படுத்தி அவரது மகனின் காதலி கார் வாங்கிக்கொண்டார்.
எஞ்சியுள்ள தொகையை அப்பெண்மணியின் மகன் தமது காதலியின் வங்கிக் கணக்கிற்கு மாற்றியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஞ்சியுள்ள பணத்தைத் தம்மிடம் ஒப்படைக்கும்படி அப்பெண்மணி தமது மகனிடமும் அவனது காதலியிடமும் கேட்டுக்கொண்டார். ஆனால் அதை அவரிடம் தர அவர்கள் மறுத்துவிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
பணத்தைத் தாயிடம் திருப்பிக்கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, எஞ்சியுள்ள தொகை அந்தப் பெண்மணியிடம் ஒப்படைக்கப்பட்டது.

