வேகக் கட்டுப்பாட்டை மீறிய குழந்தைக்கு செல்லமாக ஓர் எச்சரிக்கை

வேகக் கட்டுப்பாட்டை மீறிய குழந்தைக்கு செல்லமாக ஓர் எச்சரிக்கை

1 mins read
e7fc9dda-1633-4bf9-8ee5-2f42744e9fae
பல்துலக்கிக்கொண்டே தன் குட்டி காரை ஓட்டிச் சென்ற இரண்டு வயது குழந்தையைக் காவல்துறையினர் மடக்கிப் பிடித்து செல்லமாக ஓர் ‘எச்சரிக்கை’யுடன் விடுவித்தனர். - படம்: ஃபேஸ்புக்

வாஷிங்டன்: குட்டி இளஞ்சிவப்பு ‘கன்வர்டிபல்’ கார் ஒன்றை, பல் துலக்கியபடி ஓட்டிச்சென்ற இரண்டு வயது பெண் குழந்தையைக் காவல்துறையினர் மடக்கிப் பிடித்த வேடிக்கைச் சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

அமெரிக்காவின் ஒக்லஹோமா மாநிலக் காவல் துறையினர் தங்களின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்த காணொளி ஒன்றில் குழந்தை ரோஸ் ஃபெர்ன் ஒரு சாலையில் மின்கலத்தில் இயங்கும் தனது குட்டி காரை ஓட்டிச் செல்வதைக் காண முடிகிறது.

தன் பின்னால் காவல்துறை வாகனம் வருவதைக் கூட கவனிக்காமல் உல்லாசமாக அந்தப் பெண் குழந்தை செல்லும் காட்சி இணையவாசிகளின் மனதைக் கொள்ளை கொண்டுள்ளது.

குழந்தை வேகக் கட்டுப்பாட்டை மீறியதாக காவல்துறையினர் தங்களின் பதிவில் வேடிக்கைக்காகக் குறிப்பிட்டிருந்தனர்.

வெறும் எச்சரிக்கையுடன் அந்தச் செல்லக் குழத்தை தப்பித்துவிட்டார் என்றும் அதிகாரிகள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்