இந்திய, ஆப்பிரிக்க பயணிகளுக்கு 1,000 டாலர் கட்டணம் விதிக்கும் நாடு

சான் சால்வடோர்: இந்தியா அல்லது ஆப்பிரிக்காவில் இருந்து வரும் பயணிகளுக்கு மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடோர் 1,000 அமெரிக்க டாலர் (ரூ.80,000க்கு மேல்) கட்டணம் விதிக்கிறது. வரியைச் சேர்த்து, கட்டணம் 1,130 டாலராக இருக்கும்.

எல் சால்வடோர் வழியாக அமெரிக்காவுக்குப் புலம்பெயர்வோர் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனம் தெரிவித்தது.

இந்தியக் கடப்பிதழில் அல்லது 50க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகளில் ஏதேனும் ஒன்றின் கடப்பிதழில் பயணம் செய்வோர் இக்கட்டணம் செலுத்த வேண்டும் என்று எல் சால்வடோர் துறைமுக ஆணையம் அதன் இணையப் பக்கத்தில் அக்டோபர் 20ஆம் தேதி குறிப்பிட்டது.

அக்டோபர் 23ஆம் தேதி இக்கட்டண முறை நடப்புக்கு வந்ததாக ஆணையம் கூறியது.

கட்டண வசூல் மூலம் திரட்டப்படும் நிதி, நாட்டின் பிரதான அனைத்துலக விமான நிலையத்தை மேம்படுத்த பயன்படுத்தப்படும் என்று ஆணையம் தெரிவித்தது.

செப்டம்பரில் முடிவடைந்த 2023 நிதியாண்டில், அமெரிக்க சுங்கத்துறை மற்றும் எல்லைச் சுற்றுக்காவல் பிரிவு சாதனை அளவாக 3.2 மில்லியன் குடியேறிகளைப் பதிவு செய்தது.

ஆப்பிரிக்காவில் இருந்தும் மற்ற பகுதிகளில் இருந்தும் மத்திய அமெரிக்கா வழியாக ஏராளமான குடியேறிகள் அமெரிக்காவுக்கு நுழைகின்றனர்.

ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 57 நாடுகளில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் வரும் பயணிகளின் விவரம் குறித்து எல் சால்வடோர் அதிகாரிகளிடம் விமான நிறுவனங்கள் அன்றாடம் தெரியப்படுத்த வேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!