தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆள்கடத்தல் சந்தேகத்தில் 600 பேர் கைது

1 mins read
93fb9317-2f3b-40e5-ac5a-01bdac014c73
தமிழ் முரசு - படம்

மணிலா: பாலியல் தொழிலுக்காக ஆள் கடத்துவது, இணைய மோசடி நடவடிக்கைகளில் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் கிட்டத்தட்ட 600 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிலிப்பீன்ஸ் காவல்துறை அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற அதிரடிச் சோதனையில் கைதுசெய்யப்பட்டவர்களில் சீனா, கொரியா, வியட்னாம், பிலிப்பீன்ஸ் நாட்டினரும் அடங்குவர் என்று அதிபரின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு ஆணையம் (PAOCC) அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களையும் சந்தேகத்துக்குரியவர்களையும் அடையாளம் காண 598 கைதிகளை அதிகாரிகள் நேர்கண்டனர் என்று நீதி அமைச்சு தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்