தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பேராக் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்வு

1 mins read
44982e00-bd5f-4bc3-adef-0ee1adb10712
பேராக் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. - படம்: மலேசிய ஊடகம்

பேராக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. புதன்கிழமை காலை நிலவரப்படி 94 குடும்பங்களைச் சேர்ந்த 329 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் கெரியான், ஹிலிர் பேராக் மாவட்டங்களில் உள்ள தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பேராக் மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களில் பேராக் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக அங்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதனால் சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மழை நின்றுவிட்டபோதிலும் வெள்ளநீர் மெதுவாக வடிந்து வருவதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பெராக் வெள்ளத்தில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெராக் வெள்ளத்தில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். - படம்: பெர்னாமா

சாங்கட் ஜொங்கில் உள்ள பிடோர் ஆற்றின் நீர்மட்டம் குறைந்துள்ள போதிலும் அது இன்னும் ஆபத்தான நிலையில் தான் (4.09 மீட்டர்) உள்ளது என நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறை (ஜேபிஎஸ்) தெரிவித்துள்ளது.

மேலும் கோலாலம்பூர், சிலாங்கூர் பெர்லிஸ், கெடா, பினாங்கு, ஜோகூர், பேராக், கிளந்தான், திரங்கானு, பகாங், நெகிரி செம்பிலான், சரவாக் ஆகிய மாநிலங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்