சரவாக்கில் சிங்கப்பூர்த் துணைத் தூதரகம்

1 mins read
7b27397e-54ed-4309-a988-efb1717f2d52
சரவாக் முதலமைச்சர் அபாங் ஜொஹாரி ஓபன். - படம்: இணையம்

கூச்சிங்: மலேசிய மாநிலமான சரவாக்கிற்கும் சிங்கப்பூருக்கும் இடையே இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காகக் கூச்சிங்கில் துணைத் தூதரக அலுவலகத்தை அமைக்க சிங்கப்பூர் ஒப்புக்கொண்டுள்ளதாக சரவாக் முதலமைச்சர் அபாங் ஜொஹாரி ஓபன் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் நடைபெற்ற 10வது மலேசியா-சிங்கப்பூர் ஓய்வுத்தள சந்திப்பின்போது துணைத் தூதரக அலுவலகம் அமைக்க ஒப்புக் கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

சரவாக் விமான நிறுவனமான மாஸ்விங்ஸ் சிங்கப்பூருக்கு சேவை வழங்குவது குறித்து சிங்கப்பூரில் இருந்தபோது மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக்குடன் பேச்சு நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த முயற்சிகள் சரவாக் சுற்றுலாத் துறையை மேலும் வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்