பேங்காக்: மியன்மாரில் சிக்கியுள்ள தனது நாட்டைச் சேர்ந்த 162 பேரை மீட்கும் முயற்சியில் தாய்லாந்து இறங்கியுள்ளது.
மியன்மார் ராணுவ அரசாங்கத்துக்கும் அந்நாட்டின் சிறுபான்மை இனத்தவரைக் கொண்ட கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்துவரும் பூசலில் ஆயிரக்கணக்கானோர் தாங்கள் இருக்கும் இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மியன்மார்-சீனா எல்லைப் பகுதியில் பூசல் இடம்பெற்று வருகிறது.
அக்டோபர் மாதம் ஏழாம் தேதியன்று ஹமாஸ் அமைப்பினர் தென் இஸ்ரேலில் நிகழ்த்திய தாக்குதலில் குறைந்தது 30 தாய்லாந்து மக்கள் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து அண்டை நாடான மியன்மாரில் தனது மக்களை மீட்கும் முயற்சியில் தாய்லாந்து இறங்கியுள்ளது.