காஸாவில் தற்காலிக சண்டை நிறுத்தம் குறித்து அரபு நாடுகள், அமெரிக்காவுக்கு இடையே மாறுபட்ட கருத்து

காஸா: இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை எதிர்த்து காஸாவில் மேற்கொண்டுவரும் தாக்குதல்களின் தொடர்பில் அமெரிக்காவுக்கும் அதன் பங்காளிகளாக இருக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போரில் மரணமடையும் பாலஸ்தீனப் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் உடனடி தற்காலிக சண்டை நிறுத்தத்துக்கு குரல் ஓங்கி வருகிறது.

எனினும், இஸ்ரேலும் வா‌ஷிங்டனும் தற்காலிகமாக சண்டையை நிறுத்துவதில் உடன்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிகமாக சண்டையை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று அரபு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் செய்தியாளர் கூட்டம் ஒன்றில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கனுக்கு நெருக்குதல் அளித்தனர். எனினும், திரு பிளிங்கன் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

உடனடியாக சண்டையை நிறுத்தினால் அது ஹமாஸ் அமைப்புக்கு சாதகமாக இருக்கும் என்று அவர் கூறினார். அதன் பிறகு ஹமாஸ் மீண்டும் வலுவடைந்து தாக்குதல் மேற்கொள்ளும் என்பது திரு பிளிங்கனின் வாதம்.

அமெரிக்காவுக்கும் அதன் பங்காளி அரபு நாடுகளுக்கும் இடையே இத்தகைய வெளிப்படையான கருத்து வேறுபாடுகள் எழுவது அரிது.

ஞாயிற்றுக்கிழமையன்று தமது மத்தியக் கிழக்குப் பயணத்தைத் தொடர திரு பிளிங்கன் திட்டமிட்டிருந்தார். அக்டோபர் மாதம் ஏழாம் தேதியன்று ஹமாஸ் அமைப்பினர் எதிர்பாரா வகையில் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். அதிலிருந்து இரண்டாவது முறையாக திரு பிளிங்கன் மத்திய கிழக்கு வட்டாரத்துக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

அக்டோபர் ஏழாம் தேதி நடந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினர் 1,400 பேரைக் கொன்று 240க்கும் அதிகமானோரைப் பிணைபிடித்தனர். அதற்குப் பிறகு இஸ்ரேல், காஸாமீது ஆகாயப் படைத் தாக்குதல்களையும் நிலவழித் தாக்குதல்களையும் நடத்தியது.

அதனையொட்டி மனிதாபிமான நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இஸ்ரேல் மேற்கொண்டுள்ள தாக்குதல்களில் 9,488க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் மாண்டுவிட்டதாகவும் காஸா சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

காஸாவில் உள்ள மகாஸா அகதிகள் முகாம்மீது சனிக்கிழமை இரவு இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 51 பாலஸ்தீனர்கள் மாண்டதாக பாலஸ்தீன செய்தி நிறுவனமான வாஃபா கூறியது. அவர்களில் பெரும்பாலோர் பெண்கள், சிறுவர்கள் என்றும் வாஃபா குறிப்பிட்டது.

இந்த விவரத்தை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் உறுதிசெய்ய முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன், பெர்லின், பாரிஸ், இஸ்தான்புல், வா‌ஷிங்டன் உள்ளிட்ட உலகின் பல நகரங்களில் பாலஸ்தீன ஆதரவாளர்கள் பலர் உடனடி தற்காலிகப் போர் நிறுத்தத்துக்குக் குரல் கொடுத்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அதிபர் ஜோ பைடனின் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் எத்தனை காலம் அதற்கு செவி சாய்க்காமல் இருக்க முடியும் என்பது கேள்விக்குறியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!