ஜகார்த்தா: பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக, இந்தோனீசியாவிலும் மலேசியாவிலும் உணர்வுகளை வெளிப்படுத்தும் இமோஜி சின்னங்கள் சமூக ஊடகங்களில் மிகப் பிரபலமாகி வருகின்றன.
கருப்பு விதைகளுடன் செந்நிரச் சுளை, வெண்மையான அதன் உள்பாகம், பச்சையான மேல்பகுதி என தர்பூசணிப் பழங்களில் 4 நிறங்கள் உள்ளன.
பாலஸ்தீன தேசியக் கொடியைப் பிரதிபலிக்கும் விதமாக நான்கு வண்ணங்களுடன் தர்பூசணித் துண்டுகளின் வடிவத்தில் இமோஜிகளை மக்கள் தங்கள் முகங்களில் வரைந்துகொண்டு போராட்டங்களில் பங்கெடுக்கின்றனர்.
அவற்றை சமூக வலைத்தளங்களில் காஸா போரை கண்டித்து பகிர்ந்துகொள்கின்றனர். பலர் அவர்களின் தனிப்பட்ட புகைப்படங்களாக அதனை பயன்படுத்துகின்றனர்.
இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா இருப்பதால், கேஎஃப்சி இந்தோனீசியா என்ற அமெரிக்க விரைவு உணவு நிறுவனம் பலத்த எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளது.
இதைப்போன்றே, பல விரைவு உணவு நிறுவனங்களும் கிராஃப் வாடகை வாகனச் சேவையும் தென்கிழக்காசிய நாடுகளில் பலரின் கோபத்துக்கு ஆளாகியுள்ளன. தாகத்தோடு பலரின் கோபத்தையும் தர்பூசணி தீர்க்கிறது.

