தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மரம் நட பொது விடுமுறை

1 mins read
57af5282-a632-4b91-a9f1-0e469a1ddb04
நைரோபியில் நாடு தழுவிய மரம் நடுவதற்கான பொது விடுமுறையான திங்கட்கிழமை (நவம்பர் 13) மரக்கன்றுகளை எடுத்துச் செல்லும் தேசிய இளையர் சேவை உறுப்பினர்கள். - படம்: ஏஎஃப்பி

நைரோபி: 10 ஆண்டுகளில் 15 பில்லியன் மரங்களை நடும் அரசாங்கத்தின் இலக்கின் ஒரு பகுதியாக 100 மில்லியன் மரங்களை நட கென்ய நாட்டு மக்களுக்கு திங்கட்கிழமை (நவம்பர் 13) பொது விடுமுறை வழங்கப்பட்டது.

ஒவ்வொருவரும் குறைந்தது இரண்டு கன்றுகளை நட ஊக்குவிக்கப்படுகிறது, இது 100 மில்லியன் இலக்கிற்கு வழிவகுக்கிறது. பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட இந்த முயற்சி கென்யா எடுத்துள்ளது.

மரங்கள் வளிமண்டலத்திற்குள் உயிர்வாவை வெளியிட்டு, காற்றில் இருந்து கார்பன் டை ஆக்சைடை உள்வாங்கி, புவி வெப்பமயமாதலைச் சமாளிக்க உதவுகின்றன.

குறிப்பிட்ட பொது இடங்களில் மரம் வளர்ப்பதற்காக 150 மில்லியன் கன்றுகளை அரசாங்கம் இலவசமாக வழங்குகிறது.

அதேநேரத்தில், மக்கள் தங்கள் சொந்த நிலங்களில் நடுவதற்கு குறைந்தது இரு மரக்கன்றுகளை வாங்க அரசாங்கம் ஊக்குவிக்கிறது.

தெக்வாண்டோ கழகத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி, வனப்பகுதியில் மரம் நடுகிறார்.
தெக்வாண்டோ கழகத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி, வனப்பகுதியில் மரம் நடுகிறார். - படம்: ஏஎஃப்பி

மரம் நடுதல் இணையச் செயலி மூலம் கண்காணிக்கப்படும். இச்செயலி தாவர இனங்கள், எண்ணிக்கை, நடப்பட்ட தேதி உள்ளிட்ட விவரங்களை தனிநபர்களும் அமைப்புகளும் பதிவு செய்ய அனுமதிக்கிறது.

குறிப்புச் சொற்கள்