வேலையிலிருந்து நீக்கப்பட்டவர் நியாயம் கேட்டு வழக்கு தொடர்ந்தார்

வேலையிலிருந்து நீக்கப்பட்டவர் நியாயம் கேட்டு வழக்கு தொடர்ந்தார்

1 mins read
e036d5ea-e8c0-4c99-ac3c-7cf28e04be21
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் அமைந்துள்ள ‘ஃபாக்ஸ் நியூஸ்’ தலைமையகம். - படம்: ராய்ட்டர்ஸ்

நியூயார்க்: முன்னாள் செய்தியாளராகவும் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் ஃபாக்ஸ் நியூஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த திரு ஜேசன் டோன்னர், 2022ஆம் ஆண்டில் பணிநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

திரு டோன்னர் ‘ஃபாக்ஸ் கார்ப் ஒளிவழிக்கு 12 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில், நியாயமற்ற பணிநீக்கத்திற்காக நிறுவனத்தின் மீது செப்டம்பரில் வழக்கு தொடுத்தார்.

இதையடுத்து வழக்கைக் கூட்டரசு நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு ஃபாக்ஸ் கோரியது.

பலமுறை குற்றம்சாட்டப்படுவதுபோல் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் தேர்தல் தொடர்பான வழக்கு, ‘மோசடி வழக்கு அல்ல’ என்று டிரம்ப்பின் வழக்குரைஞர் ருடோல்ஃப் ஜியுலியானி பென்சில்வேனிய நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.

இதை திரு டோன்னர் 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டுவிட்டரில் பதிவிட்டதை அடுத்து அவர் கண்டிக்கப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்