தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தைவானைச் சுற்றி மீண்டும் சீன ராணுவ நடவடிக்கை

1 mins read
4f1d35bb-a18a-4544-9697-ea1c30036f80
தைவானைச் சுற்றி அண்மைக் காலமாக ராணுவப் பயிற்சி மேற்கொண்டு வரும் சீனா, இறையாண்மை கோரி தைவானுக்கு அழுத்தம் கொடுத்து வந்துள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

தைப்பே: தைவானைச் சுற்றி சீன ராணுவ நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக தைவான் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

தைவான் நீரிணைப் பகுதியின் நடுநிலைக் கோட்டைக் கடந்த ஒன்பது போர் விமானங்கள், போர் தயார்நிலைப் பயிற்சியை மேற்கொண்டதாக அது கூறியது.

தைவானைச் சுற்றி அண்மைக் காலமாக ராணுவப் பயிற்சி மேற்கொண்டு வரும் சீனா, இறையாண்மை கோரி தைவானுக்கு அழுத்தம் கொடுத்து வந்துள்ளது. சீனாவின் இந்தக் கோரிக்கைகளை ஏற்க தைவான் மறுத்துள்ளது.

ஆசிய பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு (ஏபெக்) கூட்டத்தில் பங்கேற்பதற்காக சீன அதிபர் ஸி ஜின்பிங் கடந்த வாரம் சான் ஃபிரான்சிஸ்கோ சென்றிருந்தார். அங்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனை அவர் சந்தித்தார். அப்போது தைவானைச் சுற்றி சீனாவின் ராணுவ நடவடிக்கைகள் குறைக்கப்பட்டன.

கடந்த புதன்கிழமை நான்கு மணி நேரம் நீடித்த பைடன்-ஸி சந்திப்பின்போது தைவான் விவகாரம் முக்கிய அங்கம் வகித்தது. அமெரிக்க-சீன உறவில் தைவானே ஆகப் பெரிய, மிகவும் ஆபத்தான விவகாரம் என்று திரு பைடனிடம் திரு ஸி கூறியதாக மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்