பிரபஞ்ச அழகியானார் நிக்கராகுவாவின் சேனிஸ் பலாசியோ

1 mins read
32b49b92-668a-45bb-abd0-a18647b62313
நிக்கராகுவா நாட்டின் 23 வயது சே‌னிஸ் பலாசியோ. - படம்: இபிஏ

எல் சால்வடோர்: மத்திய அமெரிக்க நாடான நிக்கராகுவாவைச் சேர்ந்த சே‌னிஸ் பலாசியோ, ‘பிரபஞ்ச அழகி 2023’ பட்டத்தை வென்றுள்ளார்.

72வது பிரபஞ்ச அழகிப் போட்டி எல் சால்வடோரில் நடைபெற்றது.

அதில் 23 வயது சே‌னிஸ் பலாசியோ வாகை சூடினார். அவருக்கு 2022ஆம் ஆண்டு பிரபஞ்ச அழகிப் போட்டியில் வெற்றிபெற்ற அமெரிக்காவின் ஆர்’போனே கேப்ரியல் பட்டத்தை வழங்கினார்.

இரண்டாவது இடம் தாய்லாந்தின் அண்டோனிய போசில்டுக்கு கிடைத்தது. மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் மோராயா வில்சன் வந்தார்.

72 ஆண்டில் முதல் முறையாக நிக்கராகுவா நாட்டைச் சேர்ந்தவருக்கு பிரபஞ்ச அழகி பட்டம் கிடைத்துள்ளது.

ஒரு வாரம் நடந்த அழகிப் போட்டியில் 84 நாட்டைச் சேர்ந்த பெண்கள் கலந்துகொண்டனர். நீச்சல் உடை, பாரம்பரிய உடை, மேற்கத்திய உடை என பலவிதமான உடைகள் அணிந்து அப்பெண்கள் மேடையில் வலம் வந்தனர்.

ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சமமான சம்பளம் தர வேண்டும் என்றும் பெண்களுக்கு எல்லைகள் இல்லை என்றும் பலாசியோ கூறினார்.

குறிப்புச் சொற்கள்