கோலாலம்பூர்: கிளந்தான், திரங்கானு, பேராக் மாநிலங்களில் வெள்ள நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. 21 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. புதன்கிழமை (நவம்பர் 22) காலை 8 மணி நிலவரப்படி மூன்று மாநிலங்களில் உள்ள 38 வெள்ள நிவாரண மையங்களில் மொத்தம் 5,202 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம் காரணமாக தங்களது வாழ்விடங்களைவிட்டு வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை திரெங்கானு, கிளந்தானில் அதிகரித்துள்ளது
திரங்கானுவில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆறு மாவட்டங்களில் நிலைமை மோசமடைந்துள்ளது, நேற்று இரவு 4,476 ஆக இருந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 4,787 ஆக அதிகரித்தது என்று திரங்கானு மாநில பேரிடர் மேலாண்மை குழு செயலகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
publicinfobanjir.water.gov.my/aras-air இணையத் தளத்தின்படி, பல இடங்களில் நீர்மட்டம் எச்சரிக்கை அளவில் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. ரந்தாவ் பஞ்சாங்க், கோலா நெருஸ் ஆற்றில் அபாய அளவைத் தாண்டியுள்ளது.
புதன்கிழமையும் கோலாலம்பூர், சிலாங்கூர், பேராக், பகாங், நெகிரி செம்பிலான், ஜோகூர், சபா, சரவாக் ஆகிய மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது. இதனால் வெள்ள நிலைமை மேலும் மோசமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மழை, வெள்ளம் குறித்த மேலதிக தகவல்களுக்கு http://www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும்