எம்எச்370 விமான விபத்தில் பலியானசீனப் பயணிகளுக்கு இழப்பீடு; வழக்கு தொடங்கியது

எம்எச்370 விமான விபத்தில் பலியானசீனப் பயணிகளுக்கு இழப்பீடு; வழக்கு தொடங்கியது

1 mins read
d2499c2a-9e80-4a0c-bbe7-b625eac7b1b7
இழப்பீடு தொடர்பான வழக்கு டிசம்பர் வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு எம்எச்370 விமானம் காணாமல் போனது. - கோப்புப் படம்: புளூம்பெர்க்

பெய்ஜிங்: மலேசிய ஏர்லைன்சின் எம்எச்370 விமான விபத்தில் உயிரிழந்த சீன பயணிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான வழக்கு பெய்ஜிங் நீதிமன்றத்தில் நவம்பர் 27ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு அந்த விமானம் காணாமல் போனது.

2014 மார்ச் 8ஆம் தேதி 239 பயணிகளை ஏற்றிக் கொண்டு அந்த விமானம் கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் புறப்பட்டுச் சென்றது. அதில் பயணம் செய்த பெரும்பாலான பயணிகள் சீனாவைச் சேர்ந்தவர்கள்.

இந்தியப் பெருங்கடலில் 120,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் தேடியபோது விமானத்தின் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.

ஆஸ்திரேலியா தலைமையில் நடைபெற்ற தேடல் நடவடிக்கை எந்தப் பலனும் இன்றி 2017 ஜனவரியில் நிறுத்தப்பட்டது.

விமானத்தின் சில சிதைந்த பாகங்கள் இந்தியப் பெருங்கடலில் கண்டெடுக்கப்பட்டன.

அந்த விமானத்தில் திரு ஜியாங் ஹுயின் தாயாரும் பயணம் செய்தார்.

பெய்ஜிங் நீதிமன்றத்தில் இழப்பீடு தொடர்பான வழக்கு நவம்பர் 27ஆம் தேதி தொடங்கி டிசம்பர் மத்தியில் முடிவடையும் என்று சமூக ஊடகத்தில் ஜியாங் ஹுய் தெரிவித்திருந்தார்.

சைனா டெய்லியும் ஜியாங்கை மேற்கோள்காட்டி வழக்கு நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியிட்டிருந்தது.

ஆனால், நீதிமன்றத்தின் பொது இணையப்பக்கத்தில் இந்த வழக்கு பட்டியலிடப்பட்டதாகத் தெரியவில்லை.

குறிப்புச் சொற்கள்