ஷாங்காய்: சீனாவில் சுவாச நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருப்பினும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கொவிட்-19 நெருக்கடி நிலையின்போது ஏற்பட்டதைபோல மோசமானதல்ல என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய, வழக்கத்துக்கு மாறான கிருமிவகைகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அது கூறியது.
கொவிட்-19 கட்டுப்பாட்டின்போது சிறுவர்கள் சில கிருமிவகைகளிடமிருந்து பாதுகாக்கப்பட்டனர்.
தற்போது அந்தக் கிருமிவகைகளால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் கிருமித்தொற்று தயார்நிலை, தடுப்புப் பிரிவின் தற்காலிக இயக்குநர் டாக்டர் மரியா வேன் கெர்கோவே தெரிவித்தார்.
சுவாச நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களில் பெரும்பாலானோர் சளிக்காய்ச்சலால் நோய்வாய்ப்பட்டிருப்பதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் கூறியது.