காயமடைந்த காஸா குழந்தைகளுக்கு உதவும் பிரான்ஸ்

பாரிஸ்: பிரெஞ்சின் ‘டிக்ஸ்மூயூட்’ பெருங்கப்பல் எகிப்தின் கடற்பகுதிக்கு வந்துள்ளது. இவ்வார இறுதியில் அக்கப்பல் காஸா வட்டாரத்திற்கு அருகே செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கப்பல் மூலம் போரால் காஸாவில் காயமடைந்த குழந்தைகளுக்கு மருத்துவ உதவி வழங்கவுள்ளதாகப் பிரான்ஸ் தற்காப்பு அமைச்சர் செபாஸ்டியன் லேக்ஓர்னு செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

ஹமாஸ் போராளிகள் பிணைக் கைதிகளை கொஞ்சம் கொஞ்சமாக விடுவிக்க ஒப்புகொண்டதால் காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் நான்கு நாள்களுக்கு மேலாக நிறுத்தியுள்ளது.

அதனால் கடந்த சில நாள்களாக காஸாவில் மேற்கத்திய நாடுகளின் உதவிப்பொருள்களும் உதவிகளும் குவியத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் காஸாவின் மேற்குப்பகுதியில் இருந்து கிட்டத்தட்ட 50 கிலோமீட்டர் தொலைவில் ‘டிக்ஸ்மூயூட்’ பெருங்கப்பல் நிற்கிறது.

அந்தக் கப்பல் மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. இதில் 40 படுக்கைகள் உள்ளன, காயமடைந்த குழந்தைகளுக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்க போதுமான வசதிகள் இதில் இருக்கிறது என்று பிரான்ஸ் தற்காப்பு அமைச்சர் செபாஸ்டியன் ‘யூரோப் 1’ வானொலியில் தெரிவித்தார்.

கப்பலில் 22 பொது மருத்துவர்களும், அறுவை சிகிச்சை செய்ய 16 மருத்துவர்களும், குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவர்கள் 6 பேரும் உள்ளதாக அவர் கூறினார்.

குழந்தைகளுக்கு சிகிச்சை வழங்க பிரத்தியேகமாக மாற்றப்பட்ட அந்தக் கப்பலில் இரண்டு அறுவை சிகிச்சை அறைகள் இருப்பதாகவும் செபாஸ்டியன் தெரிவித்தார்.

சிறிய காயங்கள் உள்ளவர்களுக்கு கப்பலுக்கு வெளியே சிகிச்சை தரப்படும் என்றும் மோசமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு கப்பலுக்குள் சிகிச்சை தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தேவைப்பட்டால் படுக்கைகளின் எண்ணிக்கையை 50ஆக அதிகரிக்கவும் கப்பலில் இடம் இருப்பதாக செபாஸ்டியன் கூறினார்.

கப்பல் மூலம் சிகிச்சைபெற்ற குழந்தைகள் பின்னர் காஸாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

எகிப்தும் காஸா குழந்தைகளுக்கு மருத்தவ ரீதியாக உதவ முன்வந்துள்ளது.

அது நிதி, மருத்துவ பொருள்கள் போன்ற உதவிகள் கேட்டு பிரான்சிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

காஸாவுக்குள் உதவிப்பொருள்களைக் கொண்டு செல்ல இஸ்ரேலிடம் தகுந்த அனுமதி வாங்க வேண்டும் என்பதால் காஸா-எகிப்து எல்லையில் பல்லாயிரக்கணக்கான உதவிப்பொருள்கள் தேங்கி நிற்கின்றன.

பிரெஞ்சு உதவிக்கப்பலை அடுத்து இத்தாலியும், பிரிட்டனும் மருத்துவ உதவிக்கப்பலை காஸாவுக்கு விரைவில் அனுப்புக்கூடும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். அதில் கிட்டத்தட்ட 1,200 பேர் மாண்டனர். ஏறத்தாழ 240 பேரைப் பிணையாக பிடித்துச் சென்றது ஹமாஸ்.

அதற்குப் பதிலடி தரும் விதமாக காஸாமீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதில் ஏறக்குறைய 14,000 பேர் கொல்லப்பட்டனர். அதில் 40 விழுக்காட்டினர் குழந்தைகள் என்றும் பாலஸ்தீனச் சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

இரு தரப்பும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தாக்குதல்களை நிறுத்தியுள்ளதால் அவ்வட்டாரத்தில் பலநாள்களுக்குப் பிறகு குண்டு வெடிப்பு சத்தம் இல்லாமல் சற்று அமைதி நிலவுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!