சீனா செல்வதைத் தவிர்க்குமாறு தைவான் அறிவுறுத்து

1 mins read
0806228a-d5b6-4486-8f67-87536931e24d
சீனாவின் பெய்ஜிங்கில் அமைந்துள்ள ஒரு மருத்துவமனைக்குள் தன் குழந்தையைக் கொண்டுசெல்கிறார் ஆடவர் ஒருவர். - படம்: இபிஏ

தைப்பே: சுவாச நோய்கள் தொடர்பான சம்பவங்கள் சீனாவில் அதிகரித்துள்ள நிலையில் முதியவர்களும் இளம்பிள்ளைகளும் உடலில் அதிக எதிர்ப்புச்சக்தி இல்லாதோரும் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கும்படி தைவானின் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

சீனாவில் தொடங்கிய ‘சார்ஸ்’ நோய்ப்பரவலை அடுத்து தைவான் அதன் அண்டைநாட்டில் ஏற்படும் நோய்ப் பரவல்களை உன்னிப்பாகக் கவனித்துவருகிறது.

இந்நிலையில், வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்தை அடுத்து தைவானின் சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் சீனாவுக்குப் பயணத்தைத் தவிர்க்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பயணம் அவசியமெனில் சீனாவுக்குச் செல்வதற்கு முன் சளிக்காய்ச்சலும் கொவிட்-19 கிருமித்தொற்றுக்கும் எதிரான தடுப்பூசிகளை மக்கள் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்