தர்மன்: அமெரிக்க-சீன உறவுக்கு உயிரூட்டியவர் கிசிஞ்சர்

தர்மன்: அமெரிக்க-சீன உறவுக்கு உயிரூட்டியவர் கிசிஞ்சர்

1 mins read
dea9903a-7608-487c-9c7d-706989fb2057
முன்னாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சரான திரு கிசிஞ்சர் புதன்கிழமையன்று காலமானார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

மறைந்த முன்னாள் அமெரிக்க அரசதந்திரி ஹென்ரி கிசிஞ்சர், 1972ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு மீண்டும் வலுவடைய வழிவகுத்தவர் என்று சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் கூறியுள்ளார்.

அந்தக் காலகட்டத்தில் சீனாவுடன் 20 ஆண்டுகளுக்கு அமெரிக்கா இணைந்து செயல்படாதிருந்தது. அதனைத் தொடர்ந்து இருநாட்டு உறவு மீண்டும் வலுவடைவதில் திரு கிசிஞ்சர் பங்காற்றியதாக திரு தர்மன் வியாழக்கிழமையன்று சொன்னார்.

இரு நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகம் இருக்கின்றன, இரண்டுக்கும் நடுவே அதிகப் போட்டி இருக்கிறது; இருந்தாலும் 1972ஆம் ஆண்டில் நிகழ்ந்ததைப் போல் இன்றும் தாங்கள் இணைந்து செயல்படுவதற்கான தளத்தை இரு நாடுகளும் உருவாக்கிக்கொள்ள முடியும் என்பது திரு கிசிஞ்சரின் நம்பிக்கை என்று திரு தர்மன் ஃபேஸ்புக் சமூக ஊடகத்தில் குறிப்பிட்டார்.

முன்னாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சரான திரு கிசிஞ்சர் புதன்கிழமையன்று காலமானார். அவருக்கு வயது 100.

அதனைத் தொடர்ந்து அவருக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் திரு தர்மன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.

குறிப்புச் சொற்கள்