தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜோகூரில் திடீர் வெள்ளம்; 538 பேர் வெளியேற்றம்

1 mins read
7db8d1b3-9d15-4bb6-ba6e-30091939ef78
ஜோகூரில் பல வீடுகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. - படம்: மலேசிய ஊடகம்
multi-img1 of 2

ஜோகூர் பாரு: ஜோகூர் பாருவில் வியாழன் இரவு முதல் பெய்த மழையைத் தொடர்ந்து பல இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. பல ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து ஆபத்தான நிலையை எட்டியுள்ளன. வெள்ளத்தினால் 158 குடும்பங்களைச் சேர்ந்த 538 பேர் இரு தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கம்புங் நுசா டாமை, ஜாலான் மசாய் லாமா, பாசிர் குடாங் செர்டா, கம்போங் பய கெனாங்கன் ஆகிய இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது என்று குடிமைத் தற்காப்புப் படை தனது ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை 1.30 மணி முதல் அந்த இடங்களில் வெள்ளம் ஏற்பட்டதாக பொது தற்காப்புப் படையின் பேச்சாளர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்