தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘காஸா சுரங்கங்களை இஸ்ரேல் கடல்நீரால் நிரப்பக்கூடும்’

1 mins read
164e92bb-199d-4cb2-bc1d-7d603cf2a919
காஸாவில் உள்ள அல் ‌ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே உள்ள சுரங்கத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

காஸா: காஸா பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்தும் சுரங்கங்களை நீரால் நிரப்ப இஸ்ரேல் பெரிய குழாய்களைத் தயார்ப்படுத்தி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிகாரிகள் இவ்வாறு கூறியதாக திங்கட்கிழமையன்று வால் ஸ்திரீட் ஜர்னல் ஊடகம் குறிப்பிட்டது.

நவம்பர் மாத நடுப்பகுதியில் குறைந்தது ஐந்து குழாய்களை இஸ்ரேலிய ராணுவம் அமைத்துள்ளதாக வால் ஸ்திரீட் ஜர்னல் கூறியது. அல்-‌ஷாட்டி அகதிகள் முகாமுக்கு சுமார் 1.6 கிலோமீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ள குழாய்களின்வழி மணிக்கு ஆயிரக்கணக்கான கன மீட்டர் கடல்நீரை அனுப்ப முடியும் என்றும் அதன் மூலம் சில வாரங்களில் ஹமாஸ் பயன்படுத்தும் சுரங்கங்களை நிரப்ப முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

வால் ஸ்திரீட் ஜர்னல் வெளியிட்ட இத்தகவலை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் சரிபார்க்க முடியவில்லை.

இதுகுறித்து கேட்கப்பட்டபோது இஸ்ரேல் இம்முயற்சியில் இறங்கியுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். அதேவேளை, இஸ்ரேலிய ராணுவம் இதன் தொடர்பில் கருத்து தெரிவிக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்