காஸாவில் தீவிர சண்டை: போர்நிறுத்த தீர்மானத்தை ஏற்காத அமெரிக்கா

காஸா/நியூயார்க்: பாலஸ்தீன குடிமக்களைப் பாதுகாக்க காஸாவில் உள்ள ஹமாஸ் போராளிகள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்த இஸ்ரேலுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்துள்ளது. அதனைத் தொடர்ந்து காஸா வட்டாரத்தில் சண்டை தீவிரமடைந்து உள்ளது.

அந்த வட்டாரத்தின் வடபகுதி முதல் தென்பகுதி வரை தனது ஆதிக்கத்தை நீட்டிக்கும் முயற்சியாக இஸ்ரேல் படையினர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இருதரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டதால் வெள்ளிக்கிழமை உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

இதற்கிடையே, இரு மாதங்களாக நீடிக்கும் போரை மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக நிறுத்துவதற்கான முயற்சிகளில் ஐக்கிய நாடுகள் மன்றம் தீவிரமாக இறங்கி உள்ளது.

மனிதகுலத்திற்கு எதிரானது இந்தப் போர் என்று ஐநா தலைமைச் செயலாளர் ஆண்டனி குட்டரெஸ் கடுமையாகச் சாடிய சில மணி நேரங்களில் பாதுகாப்பு மன்றம் போர்நிறுத்தத் தீர்மானத்தை வாக்களிப்புக்கு விட்டது.

ஆனால், அமெரிக்கா தனது ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்தத் தீர்மானத்தைத் தடுத்து நிறுத்திவிட்டது.

15 உறுப்பு நாடுகளைக் கொண்ட பாதுகாப்பு மன்றத்தில் போர் நிறுத்த நகல் தீர்மானத்தை ஆதரித்து 13 நாடுகள் வாக்களித்தன. பிரிட்டன் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில், தீர்மானத்தை எதிர்த்த ஒரே நாடு அமெரிக்கா என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.

ஐக்கிய அரபு சிற்றரசுகள் கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்ததற்கான காரணத்தை ஐநாவுக்கான அமெரிக்க துணைத் தூதர் ராபர்ட் உட் விளக்கினார்.

“சண்டை நிறுத்தத்திற்கான தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்க மாட்டோம். இத்தீர்மானம் அடுத்த போருக்கு வித்திடக்கூடியது,” என்றார் அவர்.

சண்டை நிறுத்தத்தை ஆதரிக்கப்போவதில்லை என்று அமெரிக்காவும் இஸ்ரேலும் கூறி வருகின்றன. .

போர் நிறுத்தம் என்பது ஹமாஸ் போராளிகளுக்கு மட்டுமே பலனளிக்கக்கூடியது என்பது இவ்விரு நாடுகளின் கருத்து.

அதற்குப் பதிலாக அவ்வப்போது சண்டை நிறுத்தத்தை மேற்கொள்ளலாம் என்கிறது அமெரிக்கா. அண்மையில் அமல்படுத்தப்பட்ட ஏழு நாள் சண்டை நிறுத்தத்தை அதற்கு அது உதாரணமாகச் சுட்டியது.

டிசம்பர் 1ஆம் தேதியுடன் முடிவுற்ற சண்டை நிறுத்தம் நடப்பில் இருந்தபோது பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்ததையும் மனிதாபிமான உதவிகள் அதிகரித்ததையும் அது மேற்கோள் காட்டியது.

17,000ஐ தாண்டிய மரண எண்ணிக்கை

இதற்கிடையே, டிசம்பர் 7ஆம் தேதி நடைபெற்ற சண்டையில் 350 பேர் உயிரிழந்ததாக காஸாவின் சுகாதார அமைச்சு தெரிவித்து உள்ளது.

இவர்களையும் சேர்த்து இந்தப் போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17,170க்கும் மேல் அதிகரித்துவிட்டது. மேலும் பல ஆயிரம் மக்களைக் காணவில்லை. அவர்களில் பலர் இடிபாடுகளுக்குள் புதைந்திருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.

இந்நிலையில், பொதுமக்களைக் காப்பதே தனது நோக்கம் என்னும் இஸ்ரேலின் சூளுரைப்புக்கும் மரணங்களின் எண்ணிக்கைக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்து உள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!