நீல நிற விழிகளுடன் அரிய வெள்ளை முதலை

ஃபுளோரிடா: அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் அமைந்துள்ளது ‘கேட்டர்லேண்ட் ஆர்லண்டோ’ எனும் விலங்கியல் தோட்டம்.

புகழ்பெற்ற இந்த வனவிலங்குப் பூங்காவில் அண்மையில் மிக அரிய வகை முதலைக் குட்டி ஒன்று பிறந்துள்ளது. விலங்கியல் தோட்டம் வியாழக்கிழமை (டிச.7) அதுகுறித்து அறிவித்தது.

மரபணு மாற்றத்தின் விளைவால், இந்தப் பெண் முதலைக்கு வெள்ளை உடலும் நீல நிறக் கண்களும் உள்ளன. தோலில் நிறமிகள் போதிய அளவில் இல்லாவிட்டால் முதலையின் உடல் இவ்வாறு வெள்ளையாக இருக்கும். ஆனால் இது ‘அல்பினோ’ குறைபாட்டிலிருந்து மாறுபட்டது என்கின்றனர் வல்லுநர்கள்.

பொதுவாக ‘அல்பினோ’ குறைபாட்டோடு பிறக்கும் முதலைகளுக்கு நிறமிகள் அறவே இருக்காது. அவற்றின் கண்கள் இளஞ்சிவப்பாக இருக்கும்.

புதிய முதலைக் குட்டியையும் சேர்த்து, உலகில் இத்தகைய எட்டு முதலைகள் மட்டுமே உள்ளதாக நியூயார்க் போஸ்ட் தகவல் வெளியிட்டுள்ளது.

புதிய அரிய வகை முதலையுடன் ஆண் முதலை ஒன்றும் கடந்த ஆகஸ்டு மாதம் பிறந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது 96 கிராம் எடையுடன் 49 செ.மீ. நீளம் கொண்ட இவ்விரு முதலைகளையும் அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் பார்வையாளர்கள் காணமுடியும். அவற்றுக்குப் பெயர் சூட்ட உதவும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!