தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இஸ்ரேல் மீது இனப்பேரழிவு குற்றச்சாட்டு சுமத்தும் தென்னாப்பிரிக்கா

1 mins read
a7f2171d-750a-4ad8-8a86-edb9f0a0d1a2
டிசம்பர் 26ஆம் தேதியன்று பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் இனப்பேரழிவை நிறுத்தக் கோரும் பதாகையை ஏந்தி நிற்கிறார். - படம்: இபிஏ

த ஹேக்: அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் இஸ்ரேல் காஸாவில் இனப்பேரழிவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தென்னாப்பிரிக்கா குற்றச்சாட்டு வைத்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டை தான் அருவருப்புடன் நிராகரிப்பதாக இஸ்ரேல் பதில் கூறியுள்ளது.

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா செய்துள்ள மனுவில் இஸ்ரேல் இனப்பேரழிவுக்கு எதிரான ஒப்பந்தத்தின்கீழ் தனக்குள்ள கடமைகளில் இருந்து தவறிவிட்டதாக கூறுகிறது. இஸ்ரேல், இதுவரை காஸாவில் பாலஸ்தீனர்களுக்கு எதிராக இனப்பேரழிவில் ஈடுபட்டுள்ளது, ஈடுபட்டு வருகிறது இனி வருங்காலத்தில் இனப்பேரழிவில் ஈடுபடும் அபாயமும் உள்ளது என்று அது அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.

தென்னாப்பிரிக்கா தனது மனுவில், இஸ்ரேல் காஸாவில் பாலஸ்தீனர்கள் ஓர் இனமாக நீடித்திருப்பதை அழிக்கும் குறிப்பிட்ட நோக்கத்துடன் செயல்படுவதாக கூறியுள்ளது.

இதை நிராகரித்த இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் லியோர் ஹையாட், இஸ்ரேல் இந்தக் குற்றச்சட்டை அருவருப்புடன் நிராகரிப்பதாக முன்னர் டுவிட்டர் என செயல்பட்ட எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்