கனமழையால் ஜோகூரில் மீண்டும் வெள்ளம்

கனமழையால் ஜோகூரில் மீண்டும் வெள்ளம்

1 mins read
e49d7e2c-c382-4673-ba4f-306b022d331b
ஜோகூரில் ஜனவரி 4ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டது. - படம்: ஜேபிபிஎம்

ஜோகூர் பாரு: ஜோகூரில் புதன்கிழமை (ஜன. 3) இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்ததை அடுத்து ஜனவரி 4ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் நான்கு மாவட்டங்களில் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

குளுவாங், மெர்சிங், ஜோகூர் பாரு, கோத்தா திங்கி ஆகியவை பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் என்று மாநிலப் பேரிடர் நிர்வாகக் குழுத் (ஜேபிபிஎன்) தலைவர் அஸ்மி ரொஹானி கூறினார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் 70 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 330 பேர் வீடுகளிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

வெள்ளத்தால் சில சாலைகள் போக்குவரத்துக்கு முழுமையாக மூடப்பட்டுள்ளன. சில சாலைகளில் கனரக வாகங்கள் மட்டும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்