தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஊர்வன கடத்தல் கும்பலை ஆஸ்திரேலிய காவல்துறை முறியடித்தது

1 mins read
0540a79f-5705-454a-8d3d-c0cbd42db087
பூர்வீக ஊர்வனவற்றை சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த குற்றவியல் கும்பல் ஹாங்காங்கிற்குக் கடத்தியதாக ஆஸ்திரேலிய காவல்துறை நம்புகிறது.  - படம்: ஏஎஃப்பி 

சிட்னி: நூற்றுக்கணக்கான பூர்வீக ஊர்வனவற்றை சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த  குற்றவியல் கும்பல் ஹாங்காங்கிற்குக் கடத்தியதாக ஆஸ்திரேலிய காவல்துறை நம்புகிறது. 

59 உயிருள்ள பல்லிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒன்பது பெட்டிகள் ஹாங்காங்கிற்கு கொண்டு செல்லப்படவிருந்தன. அந்தத்  திட்டத்தை முறியடித்த புலனாய்வாளர்கள், அந்தக்  கும்பலிடம் செப்டம்பர் 2023ல் விசாரணை மேற்கொண்டனர்.

சிட்னியில் உள்ள பல இடங்களைச் சோதனை செய்தபோது 250க்கும் மேற்பட்ட பல்லிகள், பாம்புகள், குஞ்சு பொரிக்காத முட்டைகள் போன்றவற்றைக் அவர்கள் கண்டுபிடித்தார்கள். 

பிடிபட்ட ஊர்வனங்கள்,சிறிய பெட்டிகளில் வைக்கப்படுவதற்கு முன் மோசமான நிலையில் இருந்தன என்று காவல்துறை தெரிவித்தது.

காவல்துறையால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், அழுக்கடைந்த துகள்களால் நிரப்பப்பட்ட சிறிய பிளாஸ்டிக் பெட்டிகளில் பல்லிகள் ஒன்றன் மேல் ஒன்றாக குவிக்கப்பட்டிருப்பதைக் காட்டின. 

மற்றொரு புகைப்படம், மரச் சில்லுகள் நிரம்பிய தெளிவான பிளாஸ்டிக் பெட்டியில் முட்டைகளைச் சுற்றி ஒரு பாம்பு சுருண்டிருப்பதைக் காட்டியது.

இக்குற்றச் செயலில் ஈடுபட்டதாக நம்பப்படும் 59, 54 ,31 வயதுடைய மூன்று ஆண்கள் மீதும், 41 வயதுப் பெண் மீதும் காவல்துறை  குற்றம் சாட்டியுள்ளது. 

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்