தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பலவீனமான பொருளியல், கொவிட்-19 நெருக்கடி நிலையால் சீனாவின் மக்கள் தொகை மீண்டும் குறைந்தது

1 mins read
cb21aadc-384e-407c-9930-4a5fe817c649
கொவிட்-19 தொடர்பான இறப்புகளின் அதிகரிப்பு, சீனாவின் மக்கள் தொகை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக 2023 ஆம் ஆண்டில் குறைந்ததற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.  - படம்: ராய்ட்டர்ஸ் 

ஹாங்காங்:கொவிட்-19 தொடர்பான இறப்புகளின் அதிகரிப்பு, சீனாவின் மக்கள் தொகை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக 2023 ஆம் ஆண்டில் குறைந்ததற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

நாட்டில் புதிதாக பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 2022 ஆம் ஆண்டை விட 2023ஆம் ஆண்டில் குறைந்துள்ளது என்று மக்கள்தொகை ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

இரண்டு ஆண்டுகளையும் ஒப்பிடும்போது, 2023 இல் சுமார் 9.56 மில்லியனுக்குக் குறைவாகவே புதிதாக பிறந்த குழந்தைகளின் எண்ணிகை உள்ளது என்று மக்கள் தொகை தரவுகள் காட்டுகின்றன.

பெய்ஜிங் 2022ஆம் ஆண்டு டிசம்பரில், எதிர்பாராதவிதமாக கொவிட்-19 தொடர்பான கட்டுப்பாடுகளை நீக்கியது. அதன் காரணமாக, 2023 இன் தொடக்கத்தில் சீனாவின் 1.41 பில்லியன் மக்கள் தொகைக்கு இடையே கொவிட்-19 கிருமித்தொற்று பரவி இறப்புகளை உயர்த்தியிருக்கும் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்