கொவிட்-19, சளிக்காய்ச்சல் தடுப்பூசி போட்டுக்கொள்வோர் விகிதம் மிகவும் குறைகிறது: உலக சுகாதார நிறுவனம்

லண்டன்: கொவிட்-19 கிருமியின் அண்மைய திரிபு, சளிக்காய்ச்சல் ஆகியவற்றுக்கு எதிரான தடுப்பூசிகளைக் குறைவானோரே போட்டுக்கொள்வதால், இந்தக் குளிர்காலப் பருவத்தில் சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்புகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட சில நாடுகளில் நுரையீரல் தொற்றுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அண்மைய வாரங்களில் அதிகரித்துள்ளது. சில பகுதிகளில் வயதானோர் இறப்பு விகிதமும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களில் முகக்கவசம் அணிவதை ஸ்பெயின் அரசாங்கம் மீண்டும் கட்டாயமாக்கியுள்ளது. அமெரிக்காவில் சில மருத்துவமனைகளும் இதேபோல் அறிவித்துள்ளன.

இதுகுறித்து உலகச் சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. “சளிக்காய்ச்சல், கொவிட்-19 ஆகியவற்றுக்காக மிக அதிகமானோருக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது. நம்மால் இதைத் தடுக்க முடியும்,” என்று அது குறிப்பிட்டது.

இந்தப் பருவத்தில் உலகின் பல நாடுகளில் மிகக் குறைவானோரே சளிக்காய்ச்சலுக்கும் கொவிட்-19க்கும் எதிரான தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டுள்ளனர் என்பதை அது சுட்டியது.

2023 மே மாதத்தில் உலகளாவிய பொதுச் சுகாதார நெருக்கடி முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு, கொவிட்-19 கிருமித்தொற்றால் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்தும் தடுப்பூசிகளின் நன்மை குறித்தும் மக்களுக்கு எடுத்துரைக்க அரசாங்கங்கள் போராடிவருகின்றன என்று வல்லுநர்களும் அதிகாரிகளும் கூறுகின்றனர்.

அமெரிக்காவில் பெரியவர்களில் 19 விழுக்காட்டினர் மட்டுமே இந்தப் பருவத்தில் கொவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். 18 வயதுக்கு மேற்பட்டோரில் 44.9 விழுக்காட்டினர் சளிக்காய்ச்சலுக்குத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

ஐரோப்பாவில் கொவிட்-19ஐவிட சளிக்காய்ச்சல்தான் அதிகம் பரவுகிறது. அங்கு கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்வோர் விகிதம், கிருமிப்பரவல் காலகட்டத்தைவிடக் குறைவாக உள்ளது.

உலகெங்கும் 2023 டிசம்பரில், புதிதாக 850,000 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதியானது. அவர்களில் 118,000 பேர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றனர்.

தடுப்பூசிகள் கிருமித்தொற்றைத் தடுக்காவிட்டாலும் அதனால் தீவிரமாக பாதிக்கப்படுவதைத் தடுப்பதில் திறன்மிக்கவை என்கின்றனர் வல்லுநர்கள்.

எக்ஸ்பிபி.1.5 கிருமித்திரிபுக்கான அண்மைய தடுப்பூசி, 65 வயதுக்கு மேற்பட்டோர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறவேண்டிய நிலையை 76.1 விழுக்காடு குறைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. சளிக்காய்ச்சலால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறவேண்டிய நிலையை அதற்கான தடுப்பூசிகள் 52 விழுக்காடு குறைத்துள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!