தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயை அணைக்க நூற்றுக்கணக்கானோர் முயற்சி

1 mins read
403f4793-c067-45f2-bf3f-0314f16b7164
மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காட்டுத்தீ. - படம்: ஏஎஃப்பி

பெர்த்: ஆஸ்திரேலியாவின் மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத் தலைநகர் பெர்த்துக்கு அருகே ஞாயிற்றுக்கிழமையன்று மூண்ட காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் நூற்றுக்கணக்கான தீயணைப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வீடுகளிலிருந்து தப்பியோடுமாறு தீ மூண்ட பகுதிகளில் வசிப்போரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேற்கு ஆஸ்திரேலியாவில் 25க்கும் மேற்பட்ட பகுதிகளில் காட்டுத்தீ எரிந்துகொண்டிருந்தது. அதனால் பெர்த்துக்கு சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிங்கின், சிட்டரிங் ஆகிய பகுதிகளில் வசிப்போருக்கு அபாயம் எழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

எல் நினோ பருவநிலை மாற்ற முறையால் ஆஸ்திரேலியாவில் பெரிய அளவில் காட்டுத்தீ மூண்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்