தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செங்கடலில் தாக்குதல்; மளிகைப் பொருள்விலை உயரும் அபாயம்

1 mins read
ad4db2ce-319a-4f3d-a34b-7ce5c5f1b07b
கிளர்ச்சியாளர்களின் ஏவுகணைத் தாக்குதலை தவிர்ப்பதற்காக ஆப்பிரிக்காவைச் சுற்றியுள்ள நீண்ட நீர்வழிப் பாதை வழியாக உணவு ஏற்றப்பட்ட சரக்குக் கப்பல்கள் செல்கின்றன. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: செங்கடலில் ஏற்பட்டுள்ள குழப்பம் காபியிலிருந்து பழங்கள் வரையிலான பொருள்களின் ஏற்றுமதியை சீர்குலைக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மளிகைப் பொருள்களின் விலை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களை தவிர்ப்பதற்காக நீண்ட மற்றும் விலையுயர்ந்த ஆப்பிரிக்காவைச் சுற்றிய நீழ் வழிப் பாதை வழியாக காப்பி முதல் பழங்கள் வரை கப்பல்களில் அனுப்பிவைக்கப்படுகிறது. எரிவாயு, எண்ணெய் போன்றவற்றுக்கு இந்த நீண்ட பயணத்தினால் பாதிப்பில்லை. ஆனால் பழங்கள், இதர மளிகைப் பொருள்கள் கெட்டுவிட வாய்ப்புள்ளது.

இத்தாலி போன்ற ஏற்றுமதியாளர்கள், கிவி மற்றும் ‘சிட்ரஸ்’ பழங்கள் வழியில் கெட்டுவிடும் என்று அஞ்சுகின்றனர்.

இதற்கிடையே சீன இஞ்சியின் விலை அதிகரித்து வருகிறது. சில ஆப்பிரிக்க காப்பி சரக்குகள் தாமதமடைந்து வருகின்றன. தானியங்கள், சூயஸ் கால்வாயில் இருந்து திருப்பி விடப்படுகின்றன.

செங்கடல் மீதான தாக்குதல் இதுவரை குறைவாக இருந்தாலும் உணவு விநியோகச் சங்கிலி எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை நினைவூட்டுகிறது. மேலும் நிலைமை மோசமடைந்தால் மளிகைப் பொருள்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இந்தியாவின் முக்கிய திராட்சை ஏற்றுமதி நிறுவனமான ‘யூரோ ஃபுருட்ஸ்’ இயக்குநர் நிதின் அகர்வால், அனைவரும் செங்கடல் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்நிறுவனம் வழக்கமாக செங்கடல் வழியாக ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யும்.

ஆனால் இப்போது அது நீண்ட நீர்வழிப் பாதையை பயன்படுத்துவதால் சரக்குச் செலவுகள் மும்மடங்காகவும் போக்குவரத்துச்செலவுகள் இரண்டு மடங்காகவும் அதிகரித்துள்ளன.

குறிப்புச் சொற்கள்