சீனா-கிர்கிஸ்தான் எல்லையை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்

சீனா-கிர்கிஸ்தான் எல்லையை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்

1 mins read
a2f16463-5060-4eb8-aa1f-ac9b959dc3ee
சீனா-கிர்கிஸ்தான் எல்லையில் திங்கட்கிழமை ( ஜனவரி 22) 7.0 ரிக்டர் அளவிலான பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. - படம்: EARTHQUAKE.USGS.GOV

பெய்ஜிங்:  சீனா-கிர்கிஸ்தான் எல்லையில் திங்கட்கிழமை (ஜனவரி 22) 7.0 ரிக்டர் அளவிலான பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் அதிகப்படியான சேதத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உயிரிழப்புகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

உள்ளூர் அதிகாரிகள் நிலநடுக்கம் ஏற்பட்ட  வட்டாரத்துக்குக் குழு ஒன்றை அனுப்பியுள்ளனர் என்று  சின்ஹுவா செய்தி நிறுவனம் அறிவித்தது.

அதே நேரத்தில் சுமார் 800 பேர் பெரிய பேரிடர் நிவாரண பணியை மேற்கொள்ள தயார் நிலையில் இருந்தனர். அக்சு நகருக்கு மேற்கே 140 கிமீ தொலைவில் உள்ள சீனாவின் சின்ஜியாங் பகுதியில் 13 கிமீ ஆழத்தில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணிக்குப் பிறகு நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், சுமார் 1,400 கிமீ தொலைவில் வலுவான நில அதிர்வுகளை உணர்ந்ததாக புதுடெல்லியின் தொலைக்காட்சி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டன.

நில நடுக்கம் ஏற்பட்ட இடத்திலிருந்து  20 கிமீ சுற்று வட்டாரத்துக்குள் ஐந்து கிராமங்கள் உள்ளன. 

அப்பகுதியில் சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் அதிகபட்சமாக 5.5 ரிக்டர் அளவு இருந்தது என்று ஜின்ஹுவாவின் செய்தி ஊடகம் தெரிவித்தது.

கஜகஸ்தான் அதிகாரிகளும் அதிர்வுகளைப் பற்றி அறிவித்தனர். 

இருப்பினும், உயிரிழப்புகளும் பெரிய அழிவுகளும்  இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்