தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘இனப் பேரழிவுக்கு எதிராக பாலஸ்தீனர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்’

3 mins read
b6ec5932-83db-4826-9c1e-25d0c3b5b556
தெற்கு காஸாவில் உள்ள கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேலிய தரைத் தாக்குதலில் பாலஸ்தீன அகதிகளுக்கு புகலிடம் தரும் முகாம் ஒன்றிலிருந்து புகை கிளம்புகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

தி ஹேக்: காஸாவில் இஸ்ரேல் நடத்தும் போரில் இனப் பேரழிவு தொடர்பான சில உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் உலக நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 26) அன்று வழங்கிய தனது தீர்ப்பில் கூறியது.

பாலஸ்தீனர்கள் இனப் பேரழிவு நடவடிக்கைகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை இருப்பதாக உலக நீதிமன்றம் தெரிவித்தது.

இனப் பேரழிவுக்கு எதிரான சட்டத்தின்கீழ் அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டிய பிரிவினர் என்றும் உலக நீதிமன்றம் விளக்கியது.

உலக நீதிமன்றம் வெள்ளிக்கிழமை வழங்கிய தீர்ப்பில் இனப் பேரழிவு ஏற்பட்டுள்ளதா என்ற பிரச்சினையை ஆராயவில்லை. மாறாக, அவசர கதியில் உலக நீதிமன்றம் தலையிட வேண்டும் என்ற கோரிக்கையை மட்டுமே ஆராய்ந்தது.

முன்னதாக, தி ஹேக்கில் உள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 26) காஸாவில் மேற்கொண்டு வரும் போர் நடவடிக்கைகளை நிறுத்தச் சொல்வதா என்பது குறித்துத் தனது தீர்ப்பை வழங்க உள்ளதாகவும் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து இஸ்ரேல் பரிசீலித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இஸ்ரேலிய அதிகாரிகள் போர்நிறுத்தம், பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பான முயற்சிகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்.

காஸாவில் நடைபெறும் போரைப் பொறுத்தவரை, இஸ்ரேலியத் தாக்குதலில் காஸா நகரில் உணவுக்கு வரிசை பிடித்து நின்று கொண்டு இருந்த பாலஸ்தீனர்கள் 20 பேர் கொல்லப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போரில் கொல்லப்பட்டவர்கள் அகதிகள் முகாமில் உள்ள அறுவரும் காஸா தெற்குப் பகுதியின் கான் யூனிஸ் நகரில் உள்ள அல்-நுசேரைட் அகதிகள் முகாமில் உள்ள 50 பேரும் அடங்குவர் என்று கூறப்படுகிறது.

அங்குதான் இஸ்ரேல் முழு அளவிலான தாக்குதலை தற்போது மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தகவலை உறுதி செய்ய முடியவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கும் நிலையில், இஸ்ரேல் இது பற்றி தகவல் சேகரித்து ஆராய்ந்து வருவதாகக் கூறியது. அத்துடன் இது குறித்து உடனடியாக கருத்துரைக்க முடியாது என்றும் விளக்கமளித்தது.

இது பற்றி அனைத்துலக நீதிமன்ற நீதிபதிகள் வெள்ளிக்கிழமை (ஜனவரி 26) தங்கள் தீர்ப்பை வழங்க உள்ளனர். காஸாவில் இஸ்ரேல் இனரீதியான பேரழிவை மேற்கொண்டு வருவதாக குற்றம் சுமத்தி அதற்கு எதிராக அவசரகால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென் ஆப்பிரிக்கா கூறியதைத் தொடர்ந்து அனைத்துலக நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு தனது தீர்ப்பை வழங்க உள்ளது.

கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வரும் போரில் இஸ்ரேல் காசாவின் பெரும்பகுதியை தரைமட்டமாக்கி விட்டதுடன் 1.9 மில்லியன் மக்களை தங்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றியதுடன் குறைந்தது 25,900 பேரைக் கொன்றிருப்பதாகக் கூறப்படுகிறது

சிங்கப்பூர் நேரப்படி, வெள்ளிககிழமை இரவு 8.00 மணிக்கு அனைத்துலக நீதிமன்றம் தனது தீர்ப்பை வெளியிடும் என்று தெரிவிக்ப்பட்டுள்ளது.

அனைத்துலக நீதிமன்ற நீதிபதிகள் இனப் பேரழிவு குறித்து எந்தக் கருத்தும் கூறமாட்டார்கள் என்றாலும் நீதிமன்றம் இஸ்ரேல் போரை நிறுத்த வேண்டும் என்ற இடைக்கால உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று தென் ஆப்பிரிக்கா கோரிக்கை வைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்