தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘அனைத்துலக நீதிமன்றத்தின் தீர்ப்பு இஸ்‌ரேலைத் தனிமைப்படுத்த உதவும்’

1 mins read
2071683d-9582-45b7-8890-c71e78ba8b47
நெதர்லாந்தில் உள்ள அனைத்துலக நீதிமன்றத்திற்கு வெளியே தீர்ப்புக்காகக் காத்திருந்த பாலஸ்தீன ஆதரவாளர்கள். - படம்: புளூம்பர்க்

தோஹா: அனைத்துலக நீதிமன்றம் ஜனவரி 26ஆம் தேதி அளித்த தீர்ப்பு, இஸ்‌ரேலைத் தனிமைப்படுத்தவும் காஸாவில் அது புரியும் குற்றங்களை வெளிச்சம் போட்டுக் காட்டவும் உதவும் என்று ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரி சமி அபு ஸுரி தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன இனப்படுகொலைகளை இஸ்‌ரேல் நிறுத்த வேண்டும் என்று அனைத்துலக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

காஸாவில் உள்ள பொதுமக்களுக்கு உதவ அது கூடுதல் முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. இருப்பினும், சண்டை நிறுத்தத்துக்கு அனைத்துலக நீதிமன்றம் உத்தரவிடவில்லை.

சண்டை நிறுத்தத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று தென்னாப்பிரிக்கா கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சண்டை நிறுத்தத்துக்கு உத்தரவிட அனைத்துலக நீதிமன்றம் தயங்குவதாக ஹமாஸ் அமைப்புடன் இணைந்து இஸ்‌ரேலுக்கு எதிராகப் போரிட்டு வரும் இஸ்லாமிக் ஜிஹாத் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்