கேலிவதை: மாணவரைக் குத்திக் கொன்றதாக சிறப்புத் தேவையுடைய மாணவர் மீது குற்றச்சாட்டு

1 mins read
77c51f42-7c35-480b-a264-a0d9b98e4efe
பள்ளியில் காலை நேர பள்ளிக்கூட்டம் முடிந்ததும் கத்திக் குத்துச் சம்பவம் நடந்துள்ளது. - படம்: ஏஷியா நியூஸ் நெட்வொர்க்

பேங்காக்: சிறப்புத் தேவையுடைய சிறுவன் என்று கூறப்படும் எட்டாம் வகுப்பு மாணவன், கேலி வதை செய்தற்காக தனது வகுப்புத் தோழியைக் கத்தியால் குத்திக் கொன்றதாக காவல்துறையும் பள்ளி அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் ஜனவரி 29ஆம் தேதி நக் நவா உப்தாம் என்ற பள்ளியில், பள்ளிக்கூட்டம் முடிந்த சிறிது நேரத்தில் காலை 8.30 மணி அளவில் நடந்தது என்று பள்ளி ஊழியர்கள் தெரிவித்தனர்.

காலை பள்ளிக்கூட்டத்தில் தேசிய கீதத்தை பாடிவிட்டு இரண்டாவது மாடியில் உள்ள வகுப்பறைக்குள் நுழையும்போது அந்தச் சிறுவனை பாதிக்கப்பட்ட மாணவர் கிண்டல் செய்வதைப் பார்த்ததாக இருவரது நண்பர்களும் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

பொதுவாக மிகவும் அமைதியாக இருக்கும் அந்தச் சிறுவன், பழம் வெட்டும் தனது கத்தியை வெளியே எடுத்து, பாதிக்கப்பட்டவரின் கழுத்தில் குத்தியதாகச் சொல்லப்படுகிறது.

காயமடைந்த சிறுவன் கீழே ஓடி தப்பிக்க முயன்றான், ஆனால் தாக்கிய சிறுவன் அவனை விரட்டிச் சென்று, அவனது கழுத்தின் வலது பக்கத்தில் மீண்டும் கத்தியால் குத்தியுள்ளான். இதனால் தாக்கப்பட்ட சிறுவன் கூடைப்பந்து மைதானத்தில் தரையில் விழுந்தான். பள்ளி ஊழியர் விரைந்து அந்த மாணவரை விழிப்புடன் வைத்திருக்க முயன்றார். மற்றவர்கள் தாக்கிய சிறுவனைக் கட்டுப்படுத்தினர்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவன், உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டான்.

குறிப்புச் சொற்கள்