கனமழையால் வெள்ள எச்சரிக்கையை எதிர்கொள்ளும் தெற்கு கலிஃபோர்னியா

1 mins read
5e2e279f-4415-4854-b2e6-5858c7a63b77
தெற்கு கலிஃபோர்னியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள கண்காணிப்பு ஆலோசனைகளும் எச்சரிக்கைகளும் தொடர்ந்து அமலில் இருக்கின்றன. - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

லாஸ் ஏஞ்சல்ஸ்: தெற்கு கலிஃபோர்னியாவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நோக்கி நகர்ந்த புயலால் தொடர்ந்து நான்காவது நாளாக கனமழை பெய்து வருகிறது. அங்கு வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்துவருவதால் அம்மாநிலத்தில் வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக அஞ்சப்படுகிறது.

கலிஃபோர்னியாவில் இப்புயலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது. இதை அம்மாநில ஆளுநரின் அவசர உதவி அலுவலகம் உறுதிப்படுத்தியது.

பிப்ரவரி 7ஆம் தேதி (புதன்கிழமை) நள்ளிரவு நிலவரப்படி, லாஸ் ஏஞ்சல்சில் 15 செ.மீ முதல் 33 செ.மீ வரை மழை பதிவாகியதாக என அமெரிக்காவின் தேசிய வானிலை ஆய்வு நிலையம் கூறியது.

மேலும், புயல் அரிசோனா நோக்கி நகர்வதால் லாஸ் ஏஞ்சல்சில் கூடுதலாக 2.5 செ.மீ வரை மழைப் பெய்ய வாய்ப்பு அதிகம் இருப்பதாக அந்நிலையம் முன்னுரைத்தது.

தெற்கு கலிஃபோர்னியாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு வழங்கப்பட்ட வெள்ள கண்காணிப்பு ஆலோசனைகளும் எச்சரிக்கைகளும் இன்னும் அமலில் இருக்கிறது. ஆனால் அங்கு நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகவும் அதற்கு கூடுதல் மழை பதிவாக வேண்டும் எனவும் வானிலை முன்னுரைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

லாஸ் ஏஞ்சல்சில் பிப்ரவரி 6ஆம் தேதி மாலை நேர நிலவரப்படி, பலத்த காற்று காரணமாக கிட்டத்தட்ட 400 மரங்கள் வேருடன் சாய்ந்ததாக அப்பகுதி நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

475 மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் கூறினர்.

குறிப்புச் சொற்கள்