தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஹூதி இலக்குகள் மீது அமெரிக்கா தொடர் தாக்குதல்

1 mins read
9797103f-7779-408e-b787-587fa9b191f3
தற்காப்பு நடவடிக்கையாக ஹூதிக்கு சொந்தமான நான்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.  - படம்: ராய்ட்டர்ஸ்

வா‌ஷிங்கடன்: ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களின் இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

தற்காப்பு நடவடிக்கையாக வியாழக்கிழமை அன்று ஹூதிக்கு சொந்தமான நான்கு மாலுமிகள் இல்லா கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.

செங்கடலில் உள்ள கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த தயாராக இருந்த 7 ஏவுகணைகள் அழிக்கப்பட்டதாக அது கூறியது.

கடந்த சில வாரங்களாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் பயணம் செய்யும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி அச்சுறுத்தல் செய்து வருகின்றனர். காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்ததைக் கண்டிக்கும் விதமாக இந்த தாக்குதல்களை நடத்துவதாக ஹூதி கூறுகிறது.

கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவது உலக வர்த்தகத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து பிரிட்டனும் அமெரிக்காவும் இணைந்து ஹூதி இலக்குகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. மேலும் ஹூதி அமைப்பை பயங்கரவாத குழுக்களின் பட்டியலில் அந்நாடுகள் மீண்டும் சேர்த்துள்ளன.

குறிப்புச் சொற்கள்